இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா கேரளாவில் முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல்

கேரளாவில் முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல்

பகுஜான் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருக்கும் கேரள முன்னாள் அமைச்சர் நீலலோகிததாசன். நேற்று மாலை இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு 10 மணியளவில் நீலலோகிததாசன் தனது உதவியாளருடன் இரு சக்கர வாகனத்தில் திருவனந்தபுரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

பாலராமபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை உதவியாளர் ஷிபுருத்ரன் முந்திச் சென்றார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர் நீலலோகிததாசன்  சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை  தடுத்து நிறுத்தி இருவரையும் சரமாரியாக தாக்கினார்.

இதைப் பார்த்த அப்பகுதியினர் திரண்டு அந்த வாலிபரை பிடித்தனர். இது குறித்து அறிந்ததும் பாலராமபுரம் போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் பாலராமபுரத்தை சேர்ந்த  பெயர் மனு  என்பது தெரிய வந்தது. அப்போது மனு   குடிபோதையில் இருந்தார் . வாலிபர் மனுவை போலீசார் இன்று காலை நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.

கேரளாவில் இ.கே.நாயனார் தலைமையிலான அமைச்சரவையில் நீலலோகிததாசன் போக்குவரத்துத் துறை அமைச்சராக  இருந்தபோது ஐ.ஏ.எஸ் அதிகாரி நளினி நெட்டோ-விடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்ததாக புகார் கூறப்பட்டதின் அடிப்படையில் அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார் என்பது  குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: