"திருடர்களுடனும் சமூக விரோதிகளுடனும் கூட்டணி வைக்க மாட்டோம்" என உத்தரபிரதேச மாநில சட்டபேரவைக்கான தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ராகுல் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்காக ராகுல், ப்ரியங்கா முதலானோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலத்தின் மெத்வால் நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுசெயலாளர் ராகுல் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கும். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரே உத்தர பிரதேச முதலமைச்சர் ஆவார்.
கடந்த 22 ஆண்டுகாலம் உத்தர பிரதேசத்தில் நடந்த ஆட்சி மிக சோகமான ஒரு நிகழ்வு. இனிமேலும் அது நடைபெறாது. எதிர்க்கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பாதீர்கள். என் மீதும், என்னுடைய பாட்டி மற்றும் தந்தை மீது நம்பிக்கை வையுங்கள். எனது இறுதிசொட்டு இரத்தம் உள்ளவரை மக்களுக்காக உழைப்பேன். நீங்கள் இரண்டு அல்லது நான்கு சீட்டுக்கள் தான் எங்களுக்கு கொடுத்தாலும், நாங்கள் ஒரு போதும் திருடர்களுடனும் குண்டர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம்."
மேற்கண்டவாறு அவர் பேசினார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
திருடர்களுடன் கூட்டணியில்லை - ராகுல்!
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed