"இனிமேல் முஸ்லிம்கள் குறித்து துவேஷமாக எதுவும் எழுத மாட்டேன்" என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தைக் கொடுத்துள்ளார்.
"முன்னர் முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்கவேண்டும்" என்று அவர் எழுதியிருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பிணை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவ்வாறு அவர் எழுதிக்கொடுத்ததால், அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.
"இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு துவேஷக் கருத்துக்களுடன் கூடிய கட்டுரையை முன்பு சுப்ரமணிய சாமி எழுதியிருந்தார். இதற்கு இந்திய முஸ்லிம்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், சு.சாமியின் மதத்துவேஷம் காரணமாக, தனது பல்கலைகழகத்தில் பாடம் எடுப்பதற்கும் ஹார்வர்ட் பல்கலைகழகம் தடை விதித்தது. துவேஷக் கருத்து எழுதியதால் சாமி மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
இவ்வழக்கில் சுப்ரமணிய சாமி பிணை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார். நீதிபதி முன்பாக இனிமேல் இதுபோன்ற கட்டுரைகளை எழுத மாட்டேன் என்று சாமி எழுதிக் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்குப் பிணை வழங்கிய நீதிபதி, "கைது செய்யப்பட்டால் ரூ. 25,000 அபராதம் செலுத்தி பிணையில் வெளிவரலாம்" என்று அவருடைய மனுமீது தீர்ப்பு கூறினார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
முஸ்லிம்களைப் பற்றி இனி துவேஷமாக எழுதமாட்டேன்: சு.சாமி!
Comments
அதனால், தன் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டுவிட்டு இனிமேல் அப்படி செய்யமாட்டேன் என்று எழுதிக்கொடுத்துள்ள டாக்டர் சுப்ரமணிய சுவாமியை இனியும் பின்னூட்டங்களில் தாக்குவது சரியல்ல, இஸ்லாமும் அல்ல.
இந்தியாவின் பெரும் செல்வம் அயல் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளதை வெளிக்கொணர்ந்து ஒரு பொருளாதார சுதந்திரத்திற்கு போராடி வரும் பலரில் இவர் முதன்மையானவர் மேலும் திறமையானவர்.
நமது முஸ்லிம் அரசியல்வாதிகள், குறிப்பாக காங்கிரஸோடு ஒட்டி உரவாடிக்கொண்டிருக்கும் பெரிய மனிதர்கள் யாருமே இஸ்லாம் வெறுக்கும் லஞ்சம் ஊழலுக்கு எதிராக குரலே கொடுப்பதில்லை என்பதை நினைத்துத்தான் நாம் மிகவும் வருந்த வேண்டியவர்களாய் இருக்கிறோம்.
THANKS FOR YOUR ADVISE. HE WROTE SORRY LETTER TO SC NOT TO MUSLIMS. WHY ? TO AVOID ARREST. - CONGRESS, BJP & ALL POLITICIANS ARE CORRUPTED. CONGRESS PLAYING MINORITY CARD, BJP TOOK EXTREME RIGHT OF RELEGIOUS CARD. SWAMY IS A POLITICAL URBAN
HE WANT TO MAKE HIMSELF A BIGMAN BY ATTACKING MUSLIMS. EVEN RSS & BJP DID NOT SUPPORT HIM. CHANGE YOUR VIEW.
Dear Usman,
1. There is no single destination address to represent muslims of India, at least that I do know - I hope you are also informed as to how scattered that our community in India due to various political and power motives of our leaders.
2. As an Indian muslim, it is sufficient for me that SC receives the apology letter and announce it, it is also legally recorded now.
3. Your other comments are irrlevant to this issue and me too not supporting BJP or RSS. Also be informed that I am not supporting Congress also.
4. However, in my opinion, there are more number of good politicians in the opposition, including BJP, than such people are available from congress and its supporters. This you might not agree and it is your call.
அன்பின் சாகுல் ஹமீது அவர்களே மேலே கூறியுள்ள உங்களின் கருத்து ஒரு வேலை சரியாக இருக்கலாம். இங்கு அதுவல்ல முக்கியம் சுவாமி இஸ்லாமியர்களுக்கு ஒட்டுரிமையை பறிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் மேலும் பல கட்டுரைய்களில் இஸ்லாமியர்களைப்பற்றி தரக்குறைவாக எழுதியுள்ளார்.
அவர் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டு எழுதிக்கொடுத்தது தற்காலியமாக இந்த வழக்கில் இருந்து வெளிவருவதற்கு மட்டுமேயன்றி அல்லாஹ்வுக்கு பயந்து மன்னிப்பு கேட்டுள்ளார் என்று என்ன முடியாது.
அதைவத்துக்கொண்டு நீங்களும் அவருக்கு வக்காலத்து வாங்குவது சரியில்லை என்பது எனது கருத்து.
பசீர்
ஒருவரை கேவலமாக பின்னூட்டங்களில் பதிந்துகொண்டிருப்பதைவிட அவர் திருந்தும் நம்பிக்கையை வெளிப்படுத்தி அன்பில் திருத்த முயலுவதுதான் நான் விளங்கிக்கொண்ட இஸ்லாமிய வழிமுறை,
உங்களுக்கு நீங்கள் இஸ்லாத்தைப் புரிந்துகொண்ட வழிமுறைப்படிதான் உங்கள் கருத்து இருக்கிறது என்று கருதினால் அப்படியே நடந்துகொள்ளவும். எனக்கு நான் அறிந்தகொண்ட விதத்தில், எதிரியையும் அன்பின் அரவணைப்பில் திருத்திடவே நம்பிக்கையுடன் நடைபோடுகிறேன்.
அல்லாஹ் மறுமையில் வெளிப்படுத்துவான் யாருடைய பாதை சரியென்று அல்லது சிறப்பென்று!. வாய்ப்பிருந்தால் மேலும் கொஞ்சம் சிந்தித்து ஒரு நல்ல முடிவெடுங்கள்,
Quoting Asraf Ali:
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed