கேரளாவில் மதம் கொண்ட யானை தும்பிக்கையால் ஒருவரை அடித்துக் கொன்றது. திருச்சூர் அருகில் பழஞ்சி சிரவரம்பதுகாவு என்ற இடத்தில் இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது.
இங்குள்ள பகவதி கோவிலில் திருவிழா நடைபெற்று வந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மகாதேவன் என்ற யானை கீரங்காடு பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. நேற்று (20.02.2012) அருகில் இருந்த மற்றொரு கோவில் விழாவிற்காக யானைப் பாகன் யானையை கூட்டிச் சென்றுள்ளார். அப்போது யானை பிளிறியவண்ணம் தெருவில் ஓடியது. இதனைக் கண்ட மக்கள் அலறியபடி ஓடினர்.
அந்த வழியில் வந்து கொண்டிருந்த சைமன் என்ற 75 வயது முதியவரை யானை தும்பிக்கையால் தாக்கியது. தகவல் அறிந்து விரைந்து வந்த பாதுகாப்பு வீரர் துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தி யானையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார். யானை தாக்கி திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட சைமன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
திருச்சூரில் சில தினங்களுக்கு முன்னர் மதம் கொண்ட யானை பாகனையும் மற்றொருவரையும் கொன்றது. அந்தச் சம்பவத்திற்கு பிறகு இந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது அங்குள்ள மக்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
முதியவரைக் கொன்ற யானை!