புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஒரு பக்தி ஆசாமி என்றால் அது மிகையல்ல எனும் வகையில் அவரின் செயல்பாடுகளும் அமைந்திருக்கும். ஆட்சி வருவதற்கு முன் வேட்பாளர் பட்டியலையும், ஆட்சிக்கு வந்த பின்னர் அமைச்சரவை பட்டியலும் முதல்வர் ரங்கசாமியின் ஆன்மீகத்தலமான “சேலம் அப்பா பைத்தியம் சாமி”-யின் சன்னிதியில் வைக்கப்பட்ட பின்னர் தான் வெளியிடப்படும்.
இந்நிலையில், “: புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற முதல்வர் ரங்கசாமி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரி அரசு செயலற்று போய்விட்டது என, எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் காங்., மாநில தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று காலை துணை நிலை ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் சென்று, ஆளுநரின் செயலர் உதிப்திரேவிடம் மனு அளித்தனர். பின், வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுச்சேரியில், வியாபாரிகள் மீது ரவுடிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறித்து அரசிடம் பல முறை கூறியும், யார் காதிலும் விழவில்லை. மதகடிப்பட்டில் பார் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்
.நூறடி ரோட்டில் வியாபாரி மீது தாக்குதல், ஏனாமில் கொலை ஆகியவை நடந்துள்ளது. புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. புதுச்சேரி அரசு அனைத்துச் சம்பவங்களைப் பார்த்து வாய்மூடி மவுனமாக உள்ளது. புதுச்சேரியில் மவுன சாமியார் ஆட்சி நடக்கின்றது.
சட்டம்-ஒழுங்கு கவலையளிக்கும் வகையில் உள்ளதற்கு முதல்வர் ரங்கசாமி அரசுதான் காரணம். சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டு வருவதைத் தடுக்கும் நடவடிக்கையில் முதல்வர் ஈடுபட்டதற்கான எந்தவித அத்தாட்சியும் இல்லை. போலீசாருக்கு முழு அதிகாரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அனைத்துச் சம்பவங்களும் எல்லை மீறி போய் விட்டன.
போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக போலீசாரின் ஆலோசனை கூட்டத்தை நடத்த கவர்னர் ஏற்பாடு செய்ய வேண்டும் என, மனு கொடுத்துள்ளோம். இந்தப் புகார் மனுவின் நகல், பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்படும்.. இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
புதுச்சேரியில் மவுன சாமியார் ஆட்சி நடக்கிறது: வைத்திலிங்கம் காட்டம்..!