காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வத்ரா அரசியலில் ஈடுபட ஆர்வங்காட்டுவதாக அண்மையில் செய்தி வெளியானது. இச்செய்தியை பிரியங்கா திட்டவட்டமாக மறுத்துள்ளார். என் கணவர் ஒருபோதும் அரசியலில் இறங்கமாட்டார் என்று பிரியங்கா செய்தியாளர்களிடம் கூறினார்.
நானும் அரசியலுக்கு வரவுள்ளேன் என்று ராபர்ட் வத்ரா முன்னதாக ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருந்தார். ஆனால் "ஒரு வெற்றிகரமான வணிகராக,மகிழ்ச்சியாக உள்ள என் கணவர் அரசியலுக்கு வரமாட்டார்; அச்செய்தி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது" என்று பிரியங்கா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உ.பி மாநிலத் தேர்தல் களத்தில் தனது தம்பியான ராகுலுக்கு உதவும் நோக்கில் பிரியங்கா ஆங்காங்கே தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ்ஸுக்கு வாக்கு சேகரித்துவருகிறார். இதை முன்னிட்டு தம் மகள் மிரியாவுடன் ராபர்ட்டும் உ.பி மாநிலத்தில் தற்போது முகாமிட்டுள்ளார்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
என் கணவர் அரசியலுக்கு வரமாட்டார் : ப்ரியங்கா