இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா ராகுலுக்கு பிரதமராகும் ஆசையில்லை; மன்மோகன் சிறந்த பிரதமர்: பிரியங்கா

ராகுலுக்கு பிரதமராகும் ஆசையில்லை; மன்மோகன் சிறந்த பிரதமர்: பிரியங்கா

காங்கிரஸ் பொதுச்செயலாளரும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் என்றுகருதப்படுபவருமான ராகுல்காந்திக்கு பிரதமர் ஆகும் ஆசை இல்லை என்றும், தற்போது பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் மன்மோகன்சிங் அருமையான பிரதமர் தான் என்றும் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா வதேராதெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மகளும், பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா வதேரா உத்தரபிரதே தேர்தல்
களத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக  தீவிர பிரச்சாரத்தில்ஈடுபட்டுள்ளார். பிரியங்கா கடந்த 3 நாட்களாக ராகுலின் தொகுதியான அமேதி மற்றும் சோனியாவின் தொகுதியான ரேபரேலியில் பிரச்சாரம் செய்து வருகிறார்

சோனியாவின் தொகுதியான ரேபரேலியில் செய்தியாளர்களிடம் பிரியங்கா  கூறியதாவது,

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் வலுவாக இல்லாவிட்டாலும், அங்கு பாடுபட்டு கட்சியை வளர்க்கப் போவதாக கடந்த 2007ம் ஆண்டே ராகுல் என்னிடம் தெரிவித்தார். இந்த மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகத் தான் என் சகோதரர் பாடுபடுகிறார். இளைஞர் காங்கிரஸில் ராகுல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். எந்த கட்சியிலும் இல்லாத ஜனநாயகத்தை காங்கிரஸில் கொண்டு வருகிறார். ராகுலுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவோ, நாட்டின் பிரதமராகவோ ஆகும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை.பிரதமராவது ராகுல் காந்தியின் நோக்கமும் அல்ல.உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது தான் தற்போதைக்கு ராகுலின் நோக்கம்.

தற்போதே நமக்கு மிகவும் அருமையான பிரதமர் உள்ளார். நேர்மையாகவும், கடினமாக உழைக்கக்கூடிய பிரதமர் கிடைத்ததிருப்பதால் நாம் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள்.
ராகுல் தனது நற்பெயர் கெட்டுவிடுமோ என்றெல்லாம் பயப்படுபவர் அல்ல. முன்னாள் நின்று வழிநடத்திச் செல்ல கோழைகள் தான் அஞ்சுவார்கள். நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல. ஆனால் கடந்த தடவையைவிட இந்த முறைகாங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

கடந்த 22 ஆண்டுகளாக உத்தர பிரதேசத்தில் ஊழல் மற்றும் குற்றங்கள் தலைதூக்கியுள்ளன. இதைப் பார்த்து பார்த்து மக்கள் வெறுத்துவிட்டனர். மற்ற மாநிலங்களை விட இந்த மாநிலம் பின்தங்கியுள்ளது. நான் முன்னேற்றத்தை நோக்கி பணியாற்றுகிறோம். இது சாதி, மத அரசியலை விட உயர்ந்தது. ஊழல் அரசியல் இனியும் நீடிக்கக் கூடாது

இவ்வாறு பிரியங்கா கருத்து தெரிவித்தார்.

Comments  

 
0 # A.RAJA 2012-02-06 18:54
///தற்போது பிரதமர் பதவியிலமர்த்தப்பட்டிருக்கும் மன்மோகன்சிங்/// :D

/
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: