பெங்களூர் : கர்நாடகாவில் எடியூரப்பாவின் பதவி விலகலுக்கு பின் முதல்வராக பணிபுரியும் சதானந்தா கவுடாவின் உதவியாளர்களின் சம்பளம் மாத்திரம் 70 இலட்சம் எனும் அதிர வைக்கும் தகவல் வெளி வந்துள்ளது.
ஊழலற்ற நிர்வாகம், எளிமையான ஆட்சி எனும் தாரக மந்திரத்துடன் ஆட்சி புரியும் பாஜகவின் முதல்வர் சதானந்தா கவுடாவுக்கு எத்துணை உதவியாளர்கள்,அவர்களின் சம்பளம் எவ்வளவு என்ற விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த ஆணையம் முதல்-மந்திரி சதானந்தாவுக்கு 287 உதவியாளர்கள் இருப்பதாகவும் இவர்களில் 237 பேர் தலைமைச் செயலகம் அமைந்துள்ள விதான சவுதா கட்டிடத்தில் பணிபுரிகிறார்கள் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.
21 பேர் முதல்- மந்திரியின் வீட்டிலும், 29 பேர் முதல்-மந்திரியின் அலுவலக இல்லமான “கிருஷ்ணா”விலும் வேலைக்காரர்களாக பணிபுரிகிறார்கள். மொத்தம் 287 பேருக்கும் சம்பளம் மாத்திரம் மாதந்தோறும் ரூ. 70 லட்சம் செலவிடப்படுகிறது.
இவர்களில் முதல்வரின் மூன்று தனி செயலர்கள் மாத்திரம் குறைந்தது 1 இலட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
கர்நாடகா முதல்வரின் உதவியாளர்கள் சம்பளம் மாதம் 70 இலட்சம் தான் !
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed