இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா சல்மான் ருஷ்டியின் படைப்புகள் தரமற்றவை : மார்க்கண்டேய கட்ஜு காட்டம்

சல்மான் ருஷ்டியின் படைப்புகள் தரமற்றவை : மார்க்கண்டேய கட்ஜு காட்டம்

புது தில்லி : சாத்தானின் கவிதைகள் எனும் சர்ச்சைக்குரிய நாவலை எழுதியிருக்காவிட்டால் சல்மான் ருஷ்டியின் பெயரே யாருக்கும் தெரிந்திருக்காது எனும் சொல்லும் அளவுக்கு தகுதி குறைந்த எழுத்தாளர் தான் சல்மான் ருஷ்டி என்று முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதியும் பிரஸ் கவுன்சிலின் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

வெளிநாட்டில் வாழும் எழுத்தாளர்கள் என்றால் சிறந்தவர்களாக தான் இருப்பார்கள் என்ற காலனித்துவ அடிமை புத்தியிலிருந்து நம் மக்கள் விடுபடவில்லை என்று கூறிய கட்ஜு சல்மான் ருஷ்டி வர கூடாது என்று தடுத்தது சரியா, தவறா என்று சொல்ல விரும்பவில்லை என்றும் அதை விட முக்கிய பிரச்னை குறித்தே தாம் கருத்து கூறுவதாக தெரிவி்த்தார்.

சல்மான் ருஷ்டியின் நள்ளிரவு குழந்தைகள் உள்ளிட்ட சில நூற்களை தாம் படித்துள்ளதாகவும் அவை ருஷ்டியின் எழுத்துகள் தரமற்றவை என்பதை புலப்படுத்துவதாக கூறிய கட்ஜு பனாரஸின் நதிக்கரையில் வாழ்ந்ததால் கபீர் மற்றும் துளசிதாசை விட தேம்ஸ் நதிக்கரையில் வாழும் ருஷ்டி தரமான எழுத்தாளராக கருதப்படுகிறார் என்று கட்ஜு கூறினார்.

குறுகிய ஜாதி பிரிவினைக்கு எதிராக கபீரும், பெண்கள் கொடுமைக்கு எதிராக சரத் சந்திராவும் தேசிய ஒற்றுமைக்கு ஆதரவாக பாரதியாரும் போராடியதை போன்றும் சர்வதேச அளவில் சார்லஸ் டிக்கன்ஸும் கார்கியும் சுரண்டலுக்கு எதிராக போராடியதை போன்று நவீன இந்தியா சந்திக்கும் பிரச்னைகளுக்கு எதிராக இலக்கியம் பயன்பட வேண்டாம். இவற்றையெல்லாம் விவாதிக்காமல் சல்மான் ருஷ்டி எனும் தனி மனிதரை குறித்து விவாதித்தது ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் தரம் குறைந்துள்ளதை காட்டுகிறது என்றும் மார்க்கண்டேய கட்ஜு கூறினார்.

Comments  

 
+7 # deen 2012-01-27 08:59
அவர்கள் கூறுவது உண்மை சல்மான் ருஸ்டி ஒரு தரமற்ற எழுத்தாளர்
பதில் | Reply with quote | Quote
 
 
+6 # சையத் 2012-01-27 15:48
திரு. மார்க்கண்டேய கட்ஜீ கூறுவது போல் சல்மான் ருஷ்டி ஒரு தரம் குறைந்த ஆங்கிலம் தெரிந்த எழுத்தாலன் அவ்வளவுதான்.
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # Zafar Rahmani 2012-01-27 17:32
Tiru Markandeeya kadju solvadhu nootrukku nooru sari.
Aanal namathu ezhuththalarkaL karuththu sudhanthiram ennum peyaril poorkkodi thookkuvadhu vazhakkam.
Sudhnthiramum varaiyarukkappaddadhu thaan.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # noor mohammed riyaz 2012-01-27 19:55
oru taramattra yezutthalanai patri yen pesa vendum. kuppaila podungal avan karutthai.
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # நம்பிக்கையாளன் 2012-01-27 22:52
என்னதான் தரம் குறைந்த எழுத்தாலனாக இருந்தாலும் அவன் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவாக எழுதியதால். அவன் பாராட்டத்தான் படுவான். தஸ்லீமாநஸ்ரின் இஸ்லாததை விமர்சித்ததால் அவள் RSS காரர்களால் போற்றப்படவில்லையா? அப்படித்தான்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # anees 2012-01-28 13:49
engal uyirinum melaana nabikalaarayum avarathu kudumpaththaiyum thavaraaka ezhuthi peyar perra ivanai, entha oru isulaamiyanum mannikka maattaan. avanai pukalpavarkal pukazhattum, avanukku mikavum kevalamaana azhivai kodukka aandavanai pirarthippom.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # திப்பு சுல்தான் 2012-01-28 15:48
சல்மான் ருஷ்டி தரமற்றவர் என்பதை அறிய நாம் எங்கும் போகவேண்டியதில்லை..........
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்......அவனின் சாத்தானின் கவிதைகள்
என்ற கன்றாவி எழுத்தே ...போதும்.....
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: