பெங்களூர் அக்ரஹார சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சசிகலா கதறி அழுதார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவருடைய முன்னாள் தோழி சசிகலா உள்ளிட்டவர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் அக்ரஹார சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் இன்று சசிகலா நேரில் ஆஜராகி கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
முன்னதாக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் ஆஜரானபோது, "வரவு செலவு குறித்து தமக்கு எதுவும் தெரியாது" என்றும், "சசிகலாதான் எல்லா கணக்கு வழக்குகளையும் பார்த்ததார்" என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக தெரிகிறது.
இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜரான சசிகலாவிடம் ஜெயலலிதா கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது "வங்கி கணக்கு வழக்கு விவரங்கள் குறித்து ஜெயலலிதாவுக்கு எதுவும் தெரியாது" என்றும், "காசோலைகளில் கையெழுத்து மட்டுமே அவர் போடுவார்; நான் தான் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வேன்" என்று சசிகலா, ஜெயலலிதாவுக்குச் சாதகமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டபோது பதிலளிக்க முடியாமல் சசிகலா நீதிமன்றத்திலேயே கதறி அழுததாக கூறப்படுகிறது. அவர் அழுகையை நிறுத்த போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு, அவர் நிதானத்துக்கு வந்த பின்னர் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அதன்பின்னர் சாந்தமாக சசிகலா பதிலளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
நீதிமன்றத்தில் சசிகலா கதறி அழுகை!
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed