இந்திய வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சபாநாயகர் மீராகுமார் பாகிஸ்தானுக்கு 4 நாள் பயணம் மேற்கொள்கின்றார்.
நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமார், எம்.பி.க்கள் குழுவினருடன் பாகிஸ்தானுக்கு வரும் 21-ந் தேதி பயணம் மேற்கொள்கிறார். இந்தக் குழுவில், நாடாளுமன்ற மக்களவை தலைமை செயலாளர் டி.கே. விஸ்வநாதனும், இந்தர்சிங் நம்தாரி, ஷா நவாஸ் உசேன், ஷேக் சைதுல் ஹக், தருண் விஜய் பீரேந்திர பிரசாத் பைஷ்யா, மதன்லால் சர்மா ஆகிய மக்களவை எம்.பி.க்களும், இடம் பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ராசா கிலானி, செனட் தலைவர் பரூக் ஹமீத் நாயக், பாராளுமன்ற சபாநாயகர் டாக்டர் பெமிதா மிர்சா, வெளியுறவு துறை மந்திரி ஹினா ரப்பானி ஆகியோரை இக்குழுவினர் சந்தித்து இரு தரப்பு உறவு பற்றி பேசுகின்றனர். இந்தக் குழுவினர் அங்கு 24-ந் தேதிவரை தங்கி இருப்பார்கள் என்று தெரிகிறது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
இந்திய எம்.பி.க்கள் குழுவுடன் சபாநாயகர் பாகிஸ்தான் பயணம்!