இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா 2G: 122 உரிமங்கள் ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

2G: 122 உரிமங்கள் ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

122 உரிமங்கள் ரத்து -  உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசாவின் பதவிக் காலத்தில் வழங்கப் பட்ட 122 அலைக் கற்றை ஒதுக்கீட்டு உரிமங்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கங்குலி மற்றும் ஜி.எஸ்.சிங்கவி ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்கும் முடிவை 2G வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் மேலும் ராசாவின் பதவிக் காலத்தில் வழங்கப் பட்ட 122 உரிமங்கள் ரத்து செய்வதகாவும் தெரிவித்துள்ளனர்.

சி.பி.ஐ விசாரணையில் மத்திய அரசு இடையூறு செய்து வருவதாகவும் அதன் காரணமாக சிறப்புப் புலனாய்வு குழு ஏறப்டுத்தப் பட வேண்டும் என்று கூறி பிரசாந்த் பூசன் தொடர்ந்த வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப் படாது என்றும் தெரிவித்துள்ளனர்.

Comments  

 
0 # sivakumar 2012-02-03 15:05
people please understand BSNL only can give u the best telecom service without any hidden charges. so go with BSNL .
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: