மயானக் கொள்ளை திருவிழாவில் அம்மன் வேடமிட்ட பக்தர்கள், உயிருடன் உள்ள ஆடுகள் மற்றும் கோழிகளை கடித்து ரத்தம் குடித்தவண்ணம் வழிபாடு நடத்தினர்.
சேலத்தில் தேர்மண்டி வீதியில் உள்ளது ஸ்ரீ அங்காளம்மன் கோவில். இந்தக் கோவிலில் வருடந்தோறும் மாசி மாதம் அமாவாசை தினத்தில் மயானக் கொள்ளை என்ற திருவிழா சிறப்பாக நடைபெறும். நேற்று (21.02.2012) நடைபெற்ற விழாவில் கோவிலில் சிறப்பு பூஜை நடந்த பின்னர், ஏராளமான அம்மன் பக்தர்கள் தங்களை அம்மான அலங்கரித்துக்கொண்டு ஆடியபடி சுடுகாட்டிற்கு சென்றனர்.
இவ்வாறு செல்லும்போது பொதுமக்கள் நேர்த்திக் கடனாக ஆடுகள் மற்றும் கோழிகளை அவர்களிடம் கொடுத்தனர். அதனை அம்மன் வேடமிட்ட பக்தர்கள் கடித்து ரத்தத்தை குடித்தபடி சென்றனர். இந்த பக்தர்கள் மக்களைத் தாண்டிச் சென்றாலர் குழந்தை கிடைக்கும், நோய்கள் தீரும் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கை. எனவே ஏராளமான மக்கள் சுடுகாட்டுப் பகுதியில் படுத்திருக்க அவர்களை அம்மன் வேடமிட்ட பக்தர்கள் தாண்டிச்சென்றனர்.
பின்னர் அம்மன் வேடமிட்டவர்களுக்கு படையல் வைக்கப்பட்டது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
கோவில் திருவிழா -ஆடு,கோழிகளை உயிருடன் கடித்து ரத்தம் குடித்த பக்தர்கள்
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed