இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா உத்தரபிரதேச முதற்கட்ட தேர்தலில் அமைதி - 62 சதவீதம் வாக்குப்பதிவு

உத்தரபிரதேச முதற்கட்ட தேர்தலில் அமைதி - 62 சதவீதம் வாக்குப்பதிவு

உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இன்று முதற்கட்டமாக 55 சட்ட சபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிவரை அமைதியாக நடைபெற்றது. உத்தரபிரதேசத்தின் முதற்கட்ட வாக்குப்பதிவில் 62சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று காலை திடீரென்று பெய்த மழையால் வாக்குப்பதிவு சிறுது நேரம் பாதிக்கப்பட்டது.

சித்தார்த்த நகர், பைஸாபாத், அம்பேத்கார் நகர், பல்ராம்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள 55 தொகுதிகளில் மொத்தம் 862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவையொட்டி காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது மொத்தல் 2 லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டார்கள். ஓட்டுப்பதிவை முன்னிட்டு, நேபாள எல்லைப்பகுதிகள் `மூடப்பட்டன.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: