இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா உ.பி. மாநில வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்போம்: பிரதமர்

உ.பி. மாநில வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்போம்: பிரதமர்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் , “உத்திர பிரதேசம் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் வந்தால் மட்டுமே மாநிலத்திற்கு தேவையான அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்றார்.

உத்தரப் பிரதேச மாநிலம்  கான்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “ உத்தரப் பிரதேசத்தை பொறுத்தமட்டில் மாநில அரசு ஒத்துழைக்காத பட்சத்திலும், மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு எல்லா முயற்சிகளையும் செய்துள்ளது.

இம்மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு, மின்சார வினியோகம், குடிநீர் வசதி, உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிகவும் பின்தங்கி இருக்கிறது. இம்மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் அல்லாத அரசுகளே இதற்கு காரணம் .

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உத்தரப் பிரதேசம் வளர்ச்சி பெறுவதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம்.விவசாயிகளுக்கு ரூ.9 ஆயிரத்து 200 கோடி கடன்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்குத்தான் மத்திய அரசு மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டத்தை கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி அளிப்பதற்காகத்தான் தேசிய கிராமப்புற மருத்துவ இயக்கத்தை கொண்டு வந்துள்ளோம்.

உத்தரபிரதேசத்தில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. மின்வினியோகம், சாலைகள் நிலைமை மிக மோசமாக இருக்கிறது.
இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் நிலையினை மாற்றக்கூடிய ஒரு அரசு தேவை. சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியால்தான் அத்தகைய அரசை உருவாக்க முடியும், என்றார்

Comments  

 
0 # peyarilla 2012-02-20 04:17
கான்கிரச் அரசு ஆட்ஷ்ஷி இல்லை என்ரால் அந்த மானிலத்துக்கு நிதி ஒதுகிடுவது இல்லை என்ரு தமிலக முதல்வர் சொன்னது சரி தான்.இப்படி எதிரி பொல மர்ர மானிலன்கலை நடத்தினால் இந்திய ஒருமைப்பாடு எப்படி செயல் படும்.கான்கிரசு இந்தியாவை துன்டுகலாக்கும்.
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: