"டெல்லியில் உள்ள ஜும்மா மசூதி இமாமின் பேச்சை முஸ்லிம்கள் கேட்க மாட்டார்கள்" என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
"உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள தேர்தலில் முஸ்லிம்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க கூடாது" என தில்லி ஜூம்மா மசூதியின் ஷாஹி இமாம் மௌலானா அஹமத் புஹாரி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைக் கண்டித்த திக்விஜய் சிங் ”முஸ்லிம்களை அவர் தவறாக வழிநடத்துகிறார்” என குற்றம் சாட்டினார்.
செய்தியாளர்களிடம் பாஹ்ராய்ச்சில் பேசிய திக்விஜய் சிங் ”இமாம் புஹாரி ஒரு வகுப்புவாதி” என்றும் ”தலிபான் தலைவர் ஒஸாமா பின் லேடனுக்கு ஆதரவாகப் பேசிய இவர் 2004 ஆம் ஆண்டு பா.ஜ.க. வுக்கு ஆதரவு தெரிவித்து பத்வா வழங்கியவர்” என சராமாரியாக தாக்கினார். புஹாரி வசிக்கும் பகுதியில் இமாமின் எதிர்ப்பாளர் வெற்றி பெற்றதன் மூலம் அவருடைய செல்வாக்கு தெரிகிறது என கேலியாக குறிப்பிட்டார் திக் விஜய் சிங்.
"சுகாதாரத்திட்டத்தில் ரூ 5,000 கோடி ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் வழக்கில் சம்பந்தமுள்ள 5 பேர் கொலைசெய்யப்பட்டுள்ளனர். ஊழலில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களின் பெயர்கள் வெளிவரக் கூடாது என்பதற்காகவே இந்த கொலைகள் நடந்திருக்கிறது" என பகீர் குற்றச்சாட்டையும் தெரிவித்துள்ளார் திக்விஜய் சிங்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
டெல்லி இமாம் ஒரு வகுப்புவாதி - திக்விஜய் சிங்!