ரொக்கமில்லா பணபரிவர்த்தனை: தடுமாறும் BHIM செயலி! Featured

Wednesday, 04 January 2017 05:43 Published in இந்தியா

புதுடெல்லி(04 ஜன 2017): ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை செயல்படுத்தும் விதமாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள BHIM என்ற புதிய செயலியில் பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

பிதமர் மோடி பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து உத்தரவிட்டார். அதன் பின்பு பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ரொக்கமில்லா பணபரிவர்த்தனையை செயல்படுத்தும் விதமாக மத்திய அரசு BHIM செயலியை அறிமுகப்படுத்தியது. இதை ஆண்ட்ராய்டு உபயோகிப்பவர்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும்.

தற்போது 1 மில்லியன் முறைக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டு கூகிள் ப்ளே ஸ்டோரில் 4.2 தரத்தை பெற்றுள்ள இந்த செயலியை தாங்கள் பயன்படுத்தும் போது பல பிரச்சனைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய பிரச்சனைகளால் தங்களால் இதனை வைத்து பண பரிமாற்றத்தில் ஈடுபட முடிவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைகளை BHIM செயலியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கும் ஒப்புக்கொண்டுள்ளது. அதிகப்படியான மக்கள் இந்த செயலியை பயன்படுத்துவதால் இந்த பிரச்சனைகள் ஏற்ப்பட்டுள்ளதாகவும் விரைவில் இது சரி செய்யப்படும் என்றும் அவர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

 

Last modified on Wednesday, 04 January 2017 03:46
Comments   
+1 #1 Nagarajan 2017-01-04 14:27
// அதிகப்படியான மக்கள் இந்த செயலியை பயன்படுத்துவதால் இந்த பிரச்சனைகள் ஏற்ப்பட்டுள்ளதாகவும் விரைவில் இது சரி செய்யப்படும் என்றும்...//

ஏண்டா நீங்க என்ன தம்மாத்தூண்டு மொரிஷியஸ் தீவுக்கா டிசைன் செய்தீங்க? அகண்ட பாரதத்துக்குடா...

இந்தியாவில எவ்வளவு குடிமக்கள் பயன்படுத்துவாங்கன்னு கூட தெரியாம மோசமான ஆப்பை டிசைன் செஞ்சு எங்களுக்கு ஆப்படிக்கிறீங்க?

காவி கொடியை லோகோவா டிசைன் செய்ற நேரத்துக்கு உருப்படியா வேலை செய்யும்படி டிசைன் செஞ்சிருக்கலாம்.
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.