காந்தி படம் இல்லாத புதிய 2000 ரூபாய் நோட்டுகள்! Featured

Thursday, 05 January 2017 13:48 Published in இந்தியா

புதுடெல்லி(05 ஜன 2017): புதிய 2000 ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் இல்லாமல் வெளியாகியுள்ள நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த பிறகு புதிதாக வந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியது. அதில் காந்தி படம் இடம்பெற்று வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் சொபூரில் விவசாயி ஒருவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் வங்கியில் இருந்து 2,000 நோட்டை பெற்ற விவசாயிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம், அந்த ரூபாய் நோட்டில் காந்தி படமே இல்லை. அதைக் கண்ட விவசாயி கள்ள நோட்டோ என சந்தேகித்து இது குறித்து வங்கியில் புகார் அளித்துள்ளார். அதே வங்கியில் பணம் எடுத்த மேலும் சில பேருக்கு இதேபோல் ரூபாய் நோட்டில் காந்தி படம் இல்லை. அவர்களும் வங்கியில் புகார் அளித்தனர்.

அந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டது. வங்கி அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், “அச்சிடும் பணியில் நடந்த தொழில்நுட்ப கோளாறால் காந்தி படம் விடுபட்டுள்ளதாக” விளக்கம் அளித்தனர். 

Last modified on Thursday, 05 January 2017 13:50
Comments   
+1 #1 RengaRajan 2017-01-05 18:36
தவறுதலாக கோட்சே படம் இடம் பெறவில்லையே என்று ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டியது தான்!

பாஜக ஆதரவாளன் என்று சென்ற வருடம் வரை சொல்லிக் கொண்டிருந்தேன். இப்போ சொன்னதற்கு வெட்கப்படுகிறேன்.

- ரங்கராஜன், ஸ்ரீரங்கம்.
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.