அத்வானி தலைமையில் மத்திய அரசு: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்! Featured

Saturday, 07 January 2017 10:05 Published in இந்தியா

கொல்கத்தா(07 ஜன 2017): அத்வானியை பிரதமராக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ' ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பு மூலம் மத்திய அரசு நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்கிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விவகாரத்தில் தலையிட்டு நரேந்திர மோடியிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

மோடியிடம் இருந்து தேசத்தை மீட்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து இணைந்து போராடி வருகின்றன. அந்த நபரால் (மோடி) நாட்டுக்குத் தலைமையேற்று வழிநடத்த முடியாது. அவர் கண்டிப்பாக பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும். அதற்குப் பதிலாக அத்வானி, அருண் ஜேட்லி அல்லது ராஜ்நாத் சிங் ஆகியோர் தலைமையில் தேசிய அரசை அமைக்க வேண்டும்.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து குடியரசுத் தலைவர் பேசியுள்ளார். அதனை நான் வரவேற்கிறேன்." எனறு தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு தொடங்கியது முதல் மம்தா மத்திய அரசை தொடர்ந்து எதிர்த்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

Last modified on Saturday, 07 January 2017 10:08
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.