முஸ்லிம்களை தாக்கிப் பேசிய பா.ஜ.க. எம்.பி மீது வழக்குப் பதிவு! Featured

Sunday, 08 January 2017 11:10 Published in இந்தியா

மீரட்(08 ஜன 2017): முஸ்லிம்களை குறி வைத்து தாக்கிப் பேசிய பா.ஜ.க.எம்.பி சாக்சி மகாராஜ் மீது உ.பி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு 4 மனைவிகள், 40 குழந்தைகள் என வாழ்பவர்களே காரணம் என்றும், மக்கள் தொகை அதிகரிக்க இந்துக்கள் காரணமல்ல எனவும் பேசியிருந்தார். மேலும், இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் தேவை என்றும், இதில் அரசியல் வேறுபாடுகளை தாண்டி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் சாக்சி மகாராஜ் பேசியிருந்தார்.

இஸ்லாமியர்களை குறிவைத்தே, சாக்சி மகாராஜ் இவ்வாறு விமர்சித்து பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, அவரது பேச்சுக்கு பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் மீரட் காவல்நிலையத்தில் பாஜக எம்.பி. சாக்சி மகாராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத உணர்வுகளை காயப்படுத்தியது, தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி உட்பட 4 பிரிவுகளில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாக்சி மகாராஜ் உள்ளிட்ட பா.ஜ.க வினர் அவ்வப்போது பொதுமேடைகளில் முஸ்லிம்களை குறிவைத்து தாக்கிப் பேசி வருகிறதும், இதனை ஆளும் மோடி அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதும் தொடர்கதையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Last modified on Sunday, 08 January 2017 10:29
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.