பிரதமர் மோடிக்கு எல்லை ராணுவ வீரரின் அதிர வைக்கும் கோரிக்கை (வீடியோ) Featured

Tuesday, 10 January 2017 10:18 Published in இந்தியா

புதுடெல்லி(10 ஜன 2017): பிரதமர் மோடிக்கு எல்லையில் வாடும் ராணுவ வீரர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில் அவர் பேசியுள்ள தமிழ் வடிவம் சுறுக்கமாக:

"அரசு பல வசதிகளை தந்தாலும் உயரதிகாரிகள் அனைத்தையும் விற்றுவிடுகின்றனர். ஒரு டீ புரோட்டாவுடன் காலை உணவு செய்துவிட்டு மஞ்சளும் உப்புமிட்ட பெயருக்கு செய்யப்படும் டால் (பருப்பு குழம்பு) வைத்து காலை ஆறு முதல் மாலை 5வரை நின்றுகொண்டு பனியிலும் குளிரிலும் மழையிலும் வேலை செய்கிறோம் . எங்களுக்கு வழங்கப்படும் உணவில் ஊழல் நடைபெறுகிறது. அதுஉயர் அதிகாரிகளால் திருடப்படுகிறது. இந்த தகவல் பிரதமர் மோடிக்கு செல்லும்வரை பகிரவும்  " என்று தெரிவித்திருந்தார்.

வீடியோ

Army man request to Prime Minister Modi threw social media

Last modified on Tuesday, 10 January 2017 12:30
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.