2000 ரூபாய்க்கும் தடை விதிக்க வேண்டும்: பாபா ராம்தேவ் அதிரடி! Featured

Tuesday, 10 January 2017 22:57 Published in இந்தியா

ராய்ப்பூர்(10 ஜன 2017): புதிதாக வெளியிடப்பட்ட 2000 ரூபாய்க்கும் வரும் காலத்தில் தடை விதிக்க வேண்டும் என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பாபா ராம் தேவ் கூறுகையில், "ரூ.500, ரூ.1000 நோட்டுகளை எந்த நோக்கத்துக்காக பிரதமர் மோடி ஒழித்தாரோ, அத்தகைய பிரச்சினைகளை புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் எதிர்கொள்ள தொடங்கி உள்ளன. புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை போல போலியாக எளிதில் அச்சிடும் நிலை உள்ளது.

அவற்றை கள்ளத் தனமாக தயாரித்து எளிதில் கொண்டு சென்று விட முடியும். எனவே எதிர்காலத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடு வதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை மோடியின் புதிய திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்த பாபா ராம்தேவ், புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்தது துணிச்சலானது என்றும் தெரிவித்தார்.

Hailing Prime Minister Narendra Modi for demonetising Rs. 1,000 and Rs. 500 currency notes, Yoga guru Baba Ramdev on Monday said printing of Rs. 2,000 currency notes should also be stopped in future.

Last modified on Tuesday, 10 January 2017 23:00
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.