உ.பி. பாஜகவில் பிளவு:அதிருப்தியில் பா.ஜ.க.எம்.பி!

லக்னோ(11 ஜன 2017): உத்திர பிரதேசம் மாநிலம் பா.ஜ.க.எம்.பி யோகி அதித்யானத் ப.ஜ.க தலைமையால் புறக்கணிக்கப்படுவதால் அதிருப்தியில் உள்ளதோடு, அவரது ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு விலகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஹிந்து யுவ வாகினி என்ற இயக்கத்தை தனிப்பட்ட முறையில் நடத்தி வரும் யோகி அதித்யநாத் வரும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. வின் உத்திர பிரதேச முதல்வர் வேட்பாளாராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று அவர் பா.ஜ.க. விடம் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் அவரின் கோரிக்கைக்கு சரியான பதில் வராததாலும் மோடியின் அமைச்சரவையில் அவருக்கு மந்திரி பதவி கூட கிடைக்காததாலும் அவர் அதிருப்தியில் இருந்தார் என்று கூறப்படுகிறது.

மேலும் 10 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட 27 பேர் கொண்ட பா.ஜ.க. உத்திர பிரதேச தேர்தல் கமிட்டி குழுவிலும் அவரது பெயர் இடம் பெறவில்லை. ஆனால் அவருக்கு போட்டியாக உள்ள ஷிவ் பிரதாப் சுக்லா மற்றும் ராமபதிராம் திரிபாதி ஆகியோர் அக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மேலும் வெறுப்படைந்துள்ள யோகி அதித்யானத் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார். அதேபோல சனிக்கிழமை டில்லியில் நடைபெற்ற கூட்டத்திலும் அவர் பங்குகொள்ளவில்லை.

இந்நிலையில் யோகி அதித்யானத்தின் கோரிக்கைகளை பா.ஜ.க. தலைமை சரிசெய்யவில்லையென்றால் உ.பி. தேர்தலில் பா.ஜ.க பெரும் சரிவை சந்திக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Yogi Adityanath, the Bharatiya Janata Party's (BJP) Member of Parliament (MP) from Gorakhpur in Uttar Pradesh, welcomed the Supreme Court's ruling against soliciting for votes on the basis of religion, he got the cold shoulder from the party.

Last modified on Wednesday, 11 January 2017 17:15