முத்தலாக் குறித்து உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் சர்ச்சை கருத்து! Featured

Monday, 17 April 2017 16:31 Published in இந்தியா

லக்னோ(17 ஏப் 2017): முஸ்லிம்களிடம் உள்ள முத்தலாக் முறையை மகாபாரதத்துடன் ஒப்பிட்டுப் பேசி உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

முத்தலாக் முறைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும், எதிராக மத்திய அரசும் வாதிட்டு வருகின்றன. மேலும் முத்தலாக் குறித்த அனைத்து வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசனப்பிரிவுக்கு மாற்றிவிட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி பேசுகையில் முத்தலாக் விவகாரத்தில் முஸ்லிம் சகோதரிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அவர்களுக்கு அநீதி இழைக்கப்படக் கூடாது. என்று பேசினார். பிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்கும் வகையில் பேசிஉள்ள உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், முத்தலாக் விவகாரத்தில் அமைதியாக இருக்கும் முஸ்லிம்களும் குற்றவாளிகள்தான் என கூறிஉள்ளார்.

மேலும் முத்தலாக் முறையை மகாபாரத்தில் திரௌபதி அவையில் அவமதிக்கப்பட்டதுடன் ஒப்பிட்டு பேசிய யோகி ஆதித்யநாத், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதற்கிடையே முத்தலாக் குறித்து மத்திய அரசு தவறான பிரச்சாரத்தை செய்து வருகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில் பிரதமரும், யோகி ஆதித்ய நாத்தும் இவ்வாறு பேசியிருப்பதௌ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Calling for the end of the Muslim practice of triple talaq, Uttar Pradesh Chief Minister Yogi Adityanath today equated it with the disrobing of Draupadi in Hindu epic Mahabharata and slammed the silence of the politicians over it.

Comments   
-3 #1 K. நடராஜன் 2017-04-17 16:41
அடுத்த இந்திய பிரதமர் யோகி ஆதித்யானந்தா அவர்களே...

"பிணமாக இருந்தாலும் தோண்டி எடுத்து முஸ்லிம் பெண்களை கற்பழிக்க வேண்டும்" என்று துணிச்சலாக பேசி அதன் மூலம் மக்கள் ஆதரவுடன் முதல்வரான யோகி அவர்கள், முழு இந்தியாவையும் ஆள தகுதியானவர். ஜெய் ஹிந்த்!
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.