விஜய் மல்லையா கைதான உடனே விடுதலை! Featured

Tuesday, 18 April 2017 17:06 Published in இந்தியா

லண்டன்(18 ஏப் 2017): மோசடி மன்னன் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்ட உடனே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்ற விஜய் மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடினார். இது தொடர்பான பல்வேறு வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அவரது வழக்குகள் எதிலும் சரணடையாமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் இண்டர்போல் போலீஸ் உதவியுடன் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விஜய் மல்லையாவை லண்டனில் வைத்து கைது செய்தனர்.

இதனை அடுத்து அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதனை அடுத்து லண்டன் நீதிமன்றம் உடனே அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Business tycoon Vijay Mallya, accused of defaulting on loans worth crores, has been arrested and given bail by Londo court.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.