பாபர் மசூதி வழக்கு: பா.ஜ.க. தலைவர்களிடம் மீண்டும் விசரனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி(19 ஏப் 2017): பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அத்வானி உமாபாரதி உள்ளிட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ரேபரேலி சிறப்பு கோர்ட்டு அத்வானி உள்ளிட்ட 13 பேரை விடுவித்தது. இந்த தீர்ப்பை அலகாபாத் ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இந்த விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல் முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் வழக்கை 2 ஆண்டுகளில் முடிவுக்கவும் லக்னோ நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LK Advani and other top leaders of the BJP including union minister Uma Bharti will be tried for criminal conspiracy in the demolition of the 16th-century Babri Masjid in Ayodhya, the Supreme Court ruled today.