சோஷியல் மீடியாக்களில் பரபரப்பை ஏற்படுத்திய ராணுவ வீரர் டிஸ்மிஸ்!

புதுடெல்லி(19 ஏப் 2017): ராணுவத்தில் வழங்கப்படும் உணவில் ஊழல் உள்ளதாக வெளிச்சம் போட்டு காட்டிய ராணுவ வீரர் தேஜ்பகதூர் யாதவ் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து, தேஜ்பகதூர் என்ற எல்லை பாதுகாப்பு வீர வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதில் பிரதமர் மோடிக்கும் கோரிக்கை வைத்திருந்தார்.

பின்பு தேஜ் பகதூர் யாதவ். பின், அந்த வீடியோ வெளியிட்டதற்காக, ராணுவம் தன்னை துன்புறுத்துவதாகக் கூறினார். இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. பின், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சுய விளம்பரத்துக்காக, வீடியோ வெளியிட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதற்கிடையே சமீபத்தில் தனது பணிக்காலம் முடிந்தும் ஓய்வு கொடுக்க மறுக்கிறார்கள் என்று பகதூர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அவரை, ராணுவம் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Reacting to BSF jawan Tej Bahadur Yadav's dismissal from service, after an inquiry found his complaint against receiving bad quality food as false, his wife Sharmila on Wednesday took to social media to protest against the decision.