அத்வானியிடம் விசாரணை - வாஜ்பாயின் உடல்நிலை: லாலு பகீர் கருத்து!

புதுடெல்லி(19 ஏப் 2017): பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப் பட்ட அத்வானி மீது மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற உத்தரவின் பின்னணியில் மோடி இருப்பதாக லாலுபிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு சதிவேலையில் ஈடுபட்டது தொடர்பாக சிபிஐயின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மீண்டும் அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லாலுபிரசாத் யாதவ், குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் பா.ஜ.க அத்வானியை நிறுத்திவிடக்கூடாது என்று மோடி செய்துள்ள தந்திர வேலைதான் அத்வானி மீதான விசாரனை.

சிபிஐயை தன் கையில் வைத்திருக்கும் மோடி இந்த வேலையை செய்துள்ளார். மேலும் எதிரியை வீழ்த்த தற்போதைய பா.ஜ.க எதையும் செய்யும் என்று கருத்து தெரிவித்துள்ள லாலு, வாஜ்பாய் உடல்நலம் குன்றியிருப்பதன் பின்னணியை குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

The Supreme Court's revival of the conspiracy charge against BJP veteran LK Advani in the Babri Masjid demolition case is itself a conspiracy of Prime Minister Narendra Modi to remove the BJP veteran from the Presidential race, Rashtriya Janata Dal (RJD) chief Lalu Prasad said today.