அத்வனி, உமாபாரதி உள்ளிட்டவர்களுக்கு சிறைத்தண்டனை: வழங்குமா நீதிமன்றம்!

புதுடெல்லி(20 ஏப் 2017): பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, உமாபாரதி உள்ளிட்டவர்களின் குற்றம் நிருபிக்கப்படும் பட்சத்தில் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடந்த கரசேவை நிகழ்ச்சியின்போது பாபர் மசூதி இடித்து தரைமட்ட மாக்கப்பட்டது. பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலை வர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரபிரதேச முதல்வர் கல்யாண்சிங் (தற்போது ராஜஸ்தான் மாநில ஆளுநர்) உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதில், ரே பரேலி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2001-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. அடையாளம் தெரி யாத கரசேவகர்கள் மீது தொடரப் பட்ட வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. சிறப்பு நீதி மன்றம் அளித்த தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றமும் கடந்த 2010-ம் ஆண்டு உறுதி செய்தது.

அத்வானி, ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து சிபிஐ சார்பிலும், ஹாஜி மெஹபூப் அகமது என்பவர் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் வழக்கை 2 ஆண்டுகளில் முடிவுக்கவும் லக்னோ நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்வானி உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தது 2 ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.