குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை நிறுத்தி வைப்பு!

நெதர்லாந்து(18 மே 2017): பாகிஸ்தானில் மரண தண்டனை வழங்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (வயது 46) மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ் (வயது 46). இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் ‘ரா’ அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அவர் மீது குற்றம் சாட்டியது.

மேலும் இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு கடந்த மாதம் 10-ந் தேதி மரண தண்டனை விதித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் ஐ.நா. அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச கோர்ட்டில் கடந்த 8-ந் தேதி வழக்கு தொடர்ந்தது. குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் நிறைவேற்றிவிட்டதோ என்ற சந்தேகமும் எழுகிறது என்று இந்தியா கவலையும் தெரிவித்தது. இதனால், மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி சர்வதேச கோர்ட்டு பாகிஸ் தானுக்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில், இரு நாடுகளும் தங்களுடைய வாதத்தை சர்வதேச கோர்ட்டில் முன் வைத்தன.

இரு நாட்டு வாதங்களின் இறுதியில் இவ்விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட உத்தரவு வரும் வரையில் பாகிஸ்தான் குல்பூஷண் ஜாதவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.

The UN’s top court on Thursday ordered Pakistan to stay the execution of an Indian national convicted of spying, in a high-profile legal case brought by New Delhi.