ஜி.எஸ்.டி. மூலம் அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும்!

புதுடெல்லி(18 மே 2017): ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒருமான நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதலும் அளிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களின் சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகின்றது.

ஜி.எஸ்.டி சட்டம் குறித்த இறுதிக் கட்ட ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீநகரில் இன்றும் நாளையும் நடைபெற்று வருகின்றது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அந்தந்த மாநிலங்களின் முக்கிய அதிகாரிகளும், அமைச்சர்களும் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் நடைமுறைக்கு வந்த பின் பருப்பு உள்ளிட்ட அன்றாடம் தேவைப்படும் பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி சட்டத்தில் இருந்து பால்-க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு தானிய பொருட்களின் விலை மலிவாகும் என்றும் வருமான வரித் துறை செயலாளார் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

தலைமுடி எண்ணெய், பற்பசை உள்ளிட்ட பொருட்கள் 18 சதவீத வரியாகவே இருக்கும். சர்க்கரை, டீ, காபி உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீத வரியாக இருக்கும் என்று கூறினார்.

The GST Council on Thursday finalised tax rates on 80-90 per cent of goods and services under the four-slab structure with essential items of daily use being kept in the lowest bracket of 5 per cent. The Council, headed by Union Finance Minister Arun Jaitley and comprising representatives of all states, in the opening session of the two-day meeting also approved rules for the Goods and Services Tax (GST) regime that is scheduled to kick in from July 1.