குல்புஷன் ஜாதவ் விவகாரத்தில் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது: நீதிபதி கட்ஜு! Featured

Saturday, 20 May 2017 01:55 Published in இந்தியா

புதுடெல்லி(20 மே 2017): குல்புஷன் ஜாதவ் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியதன் மூலம் மிகப்பெரிய தவறு நிகழ்த்தி விட்டதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மர்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்து இருந்த மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்திவைத்தது.

பலுசிஸ்தான் பகுதியில் உளவு பார்த்ததாக குல்புஷனை மார்ச் 3ஆம் தேதி கைது செய்ததாக பாகிஸ்தான் காவல்துறை அறிவித்தது. பின்னர் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் இந்த வழக்கை இந்தியா சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. சர்வதேச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், குல்புஷன் ஜாதவ் மரணதண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டப்பட்டது.

இந்நிலையில் இவ்விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதன் மூலம் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என்று முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், பாகிஸ்தான் குல்புஷன் ஜாதவ் விவகாரத்தில் பெரிய அளவில் எதிர்ப்பை காட்டவில்லை, ஏனென்றால் காஷ்மீர் விவகாரத்தையும் அது சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல தீர்மானித்திருப்பது இதன் மூலம் தெரிகிறது. குல்புஷன் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவுக்கு மகிழ்ச்சியளிப்பதாக நினைத்தால் அது தவறு. இதில் பாகிஸ்தானுக்குதான் மிகப்பெரிய மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ள கட்ஜு, இனி இந்தியா தொடர்பான எல்லா விவகாரங்களையும்,குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தை நாடும். இது இந்தியாவுக்கு மகிழ்ச்சியானதல்ல என்று நீதிபதி கட்ஜு தெரிவித்துள்ளார்.

Katju says his Facebook post

Serious mistake for India to go to ICJ

Please are gloating over India's victory before the International Court of Justice regarding Kulbhushan Jadhav.
My own opinion is that it was a serious mistake for India to go to the ICJ on this issue, as we have played into Pakistan's hands, and given it a handle to open up many other issues . In fact that is why it seems that Pakistan did not seriously object to the jurisdiction of ICJ.

Now it is certain that Pakistan will approach the ICJ for deciding the Kashmir dispute, and it will then hardly lie in our mouth to object to the jurisdiction of ICJ, since we cannot blow hot and cold together.

Pakistan must be very happy that we went to the ICJ over a single individual's fate, as now they can raise all kinds of issues, particularly Kashmir, in international fora, to which we had always objected till now. By going to the ICJ we may have opened up a Pandora's box

 

 

Last modified on Saturday, 20 May 2017 10:18
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.