பரபரப்பில் டெல்லி; சீதாராம் யெச்சூரி ஜனாதிபதியாகிறாரா? Featured

Saturday, 17 June 2017 03:53 Published in இந்தியா

புதுடெல்லி(17 ஜூன் 2017): அடுத்த ஜனாதிபதி யார் என்கிற பரபரப்பில் டெல்லி அரசியல் நிலவி வருகிறது.

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் 14-ஆம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே பா.ஜ.க சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்தவிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் அமித் ஷா மற்றும் வெங்கைய நாயுடு, ராஜ்நாத் சிங் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை இன்று சந்தித்தனர். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில், போட்டியின்றி தேர்ந்தெடுக்க பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே இன்று அமித் ஷா மற்றும் வெங்கைய நாயுடு, ராஜ்நாத் சிங் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தனர். அப்போதும் பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றிதான் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

Comments   
0 #1 சுகுமாரன்ன் 2017-06-17 11:32
:lol:
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.