ரம்ஜானில் நடு இரவில் ஒலிபெருக்கி உபயோகிக்க எதிர்ப்பு! Featured

Sunday, 18 June 2017 03:19 Published in இந்தியா

லக்னோ(18 ஜூன் 2017) உத்திர பிரதேசத்தில் ரம்ஜான் மாதத்தில் நடு இரவில் அதிக சத்தத்துடன் பொது இடங்களில் ஒலிபெருக்கி உபயோகிக இந்துக்களும், முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரேம் நகர் பகுதியில் அதிகாலை 03 மணிக்கு அதிக சத்தத்துடன் சிலர் ஒலிபெருக்கி உபயோகிப்பதாகவும் இதனால் அப்பகுதியில் உள்ள பலருக்கு சிரமம் ஏற்படுவதாகவும் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்டு சோபித் செக்சேனா என்பவர் தெரிவிக்கையில், "என் தந்தை இதய நோயாளி. கடந்த வருடன் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவர் தினமும் சரியாக உறங்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் 73 வயது என் தாயும் நோயாளி, ஆனால் சிலர் நடு இரவு 03 மணிக்கு அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி உபயோகிப்பதால் என் பெற்றோருக்கு சிரமம் ஏற்படுகிறது." என்று தெரிவித்தார்.

மேலும் ரம்ஜான் பிறருக்கு உதவ வேண்டுமே தவிர இடையூறு செய்யக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் முஸ்லிம்களும் இதுபோன்று அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி உபயோகிப்பதால் சிரமங்களை சந்திப்பதாக கூறி இருதரப்பினரும் இணைந்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

Hindu and Muslims of Bareilly unite against the announcements of loudspeakers for the 3 am daily during Ramzan.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.