மாணவிகளுக்கு நிர்வாண தண்டனை: பள்ளி முதல்வர் உட்பட மூன்று பேர் கைது! Featured

Sunday, 18 June 2017 16:39 Published in இந்தியா

பாட்னா(18 ஜூன் 2017): பள்ளி மாணவிகளுக்கு அரை நிர்வாண தண்டனை வழங்கியது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீஹார் மாநிலம் பெகுசராய் நகரில் உள்ள பள்ளியொன்றில், சீருடை மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த தவறிய இரண்டு மாணவிகளை அரை நிர்வாண கோலத்தில் பள்ளிக்கு வெளியே விரட்டி அடித்துள்ளார்.

வீடு வரை அவர்கள் அப்படியே கிராம தெருக்களில் நடந்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, பள்ளி முதல்வர், ஆசிரியை உட்பட மூன்று பேரை காவல்துறையின கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.