மருத்துவமனையின் அலட்சியம்: உயிருடன் இருந்த குழந்தை இறந்துவிட்டதாக அறிவிப்பு!

புதுடெல்லி(18 ஜூன் 2017): மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை அடக்கம் செய்யும்போது உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டது. குழந்தையை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் கொண்டு சென்றபோது அடக்கம் செய்யும் இடத்தில் கை கால்கள் உசும்பியதை உறவினர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடன் குழந்தையை டெல்லி அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது விசாரனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்று எத்தனை குழந்தைகளை இறந்ததாக அறிவித்தார்களோ என்ற அச்சமும் பொதுமக்களிடையே நிலவுகின்றது.