இந்திய வீரர்கள் உருவ பொம்மை எரிப்பு: டி.வி.பெட்டிகள் உடைப்பு!

கான்பூர்(19 ஜூன் 2017): சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து இந்திய ரசிகர்கள் இந்திய வீரர்களின் உருவப்படங்கள் மற்றும் உருவ பொம்மைகளை எரித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இவை ரசிகர்களுக்கிடைய பெறும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் சில ரசிகர்கள் இந்திய வீரர்களின் உருவப்படங்கள் மற்றும் உருவ பொம்மைகள் சாலையில் நின்று எரித்தும், தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்தும் அவர்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

இதனால் இந்திய அணியின் முக்கிய வீரர்களின் வீடுகளுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள தோனியின் இல்லத்தின் முன் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

 A section of Indian cricket fans reacted to Pakistan’s convincing victory over India in the final of the Champions Trophy on Sunday by smashing television sets in protest