முஸ்லிம் முதியவர் மசூதியில் வைத்து சுட்டுக்கொலை!

சோனாபேட்(19 ஜூன் 2017): அரியானா மாநிலத்தில் சோனாபேட் அருகே உள்ள கிராமத்தில் முஸ்லிம் முதியவர் ஒருவர் மசூதியில் வைத்து அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யபட்டுள்ளார்.

அரியானா மாநிலம் சோனாபேட் அருகே உள்ள ரோசாலி கிராமத்தில் உள்ள ஒரு மசூதியில் ஷபீர் என்ற 56 வயது முதியவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையே சிசிடிவி வீடியோ மூலம் கொலையாளியை அடையாளம் காண போலீஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஷபீருக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மசூதியில் வைத்து முஸ்லிம் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The 56-year-old identified as Shabbir was killed yesterday evening in a masque in sonapet

 

Last modified on Monday, 19 June 2017 06:44