காதலை கைவிட மறுத்த சிறுவன் படுகொலை: இருவர் கைது! Featured

Tuesday, 20 June 2017 03:49 Published in இந்தியா

புதுடெல்லி(20 ஜூன் 2017): காதலை கைவிட மறுத்த 16 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அருகிலுள்ள கஞ்சவாலா பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் ஜடின். கடந்த வெள்ளிக்கிழமை அப்பகுதியில் ஜாக்கிங் செல்லும்போது, அவருக்கு தெரிந்த நான்கு நண்பர்கள், தனியாக பேச வேண்டும் என அங்குள்ள பாழடைந்த பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், அங்கு சென்றதும் மூன்று பேர் ஜடினை ஒரு சேரில் கட்டி வைத்து, வாயை டேப்பால் ஒட்டினர். பின்னர், தனக்கு விருப்பமான பெண்ணை காதலித்தது குறித்து கேட்ட மூவரும், ஜடினின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடினர். ரத்தம் சொட்ட சொட்ட துடிதுடித்து அங்கேயே இறந்தார் ஜடின்.

இதனையடுத்து, இந்த சம்பவத்தை ஒரு நண்பரிடம் சொல்லி, தப்பிக்க என்ன செய்யலாம் என்று மூவரும் கேட்டுள்ளனர். அந்த சிறுவன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் மகன். தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டு தனது அப்பாவிடம் இந்த சம்பவத்தைச் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சப் இன்ஸ்பெக்டர் போலீசில் தகவலளித்தார். போலீசார் உடனடியாக அந்த பாழடைந்த பங்களாவுக்கு சென்று, அங்கு ரத்த வெள்ளத்தில் பலியாகி இருந்த ஜடினின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.