கலவரத்தை தூண்டும் வகையில் பொய்யான படத்தை வெளியிட்ட பாஜக தலைவர் மீது வழக்குப் பதிவு! Featured

Tuesday, 11 July 2017 10:21 Published in இந்தியா

புதுடெல்லி(11 ஜூலை 2017): மேற்கு வங்க கலவரத்தை மேலும் ஊதி பெரிதாக்கும் விதமாக குஜராத் கலவர புகைப்படத்தை வெளியிட்டு வன்முறையை தூண்டும் விதமாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பாஜக டெல்லி செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் பதிவை அடுத்து மேற்கு வங்கத்தில் பெரும் கலவரம் வெடித்தது. பல கடைகள் வீடுகள் சூரையாடப்பட்டன. இதையடுத்து, 'சமூக வலைதளங்களில் தவறான மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடந்த கலவரம்குறித்து பி.ஜே.பி-யின் டெல்லி செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அப்போது, மேற்கு வங்கக் கலவரத்தின் படத்துக்குப் பதிலாக, 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரப் படங்களை இணைத்து ட்வீட் செய்தார்.

இதனால், வேண்டுமென்றே தவறான படம்மூலம் தவறான செய்தியைப் பரப்புகிறார் என்று அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, "தவறான செய்திகளைப் பரப்பி, ஃபேஸ்புக்கை, ஃபேக்புக்காக சிலர் பயன்படுத்திவருகின்றனர். தங்களது அரசியல் நலனுக்காக, இதுபோன்று பொய் பேசுதை மேற்குவங்க மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பாஜக தலைவர் விஜேத்தா மாலிக் என்பவர் பேஜ்பூரி திரைப்படத்தில் தோன்றும் ஒரு வன்புணர்வு காட்சியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு மத மோதலை தூண்ட முயன்றது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Tuesday, 11 July 2017 10:30
Comments   
0 #2 MR A B 2017-07-12 13:05
NAYEDA MAGALAY
Quote
0 #1 Indian 2017-07-12 00:00
Leaders are supposed to calm the tensions, not to create. How crazy world is this.
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.