இந்திய முஸ்லிம்கள் மக்கா செல்ல இயலாது: பாஜக எம்.எல்.ஏ மிரட்டல்!

லக்னோ(14 ஜூலை 2017): அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்காவிட்டால் இந்திய முஸ்லிம்கள் மக்கா மதீனா செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக எம்.எல்.ஏ. பிரிஜ் பூஷன் மிரட்டல் விடுத்துள்ளார்.

உத்திர பிரதேசம் ராஜ்பூட் எம்.எல்.ஏ பிரிஜ் பூஷன் ஃபேஸ் புக்கில் பேசியுள்ள துவேஷமான பேச்சு தற்போது வைரலாகியுள்ளது. அதில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி தராவிட்டால் இந்திய முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செல்லவோ, மக்கா மதீனா செல்லவோ அனுமதிக்க மாட்டோம் என்று துவேஷமாக பேசியுள்ளார்.

மேலும் அசாதுத்தீன் உவைசி உள்ளிட்ட தலைவர்களும் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்றும் அவர் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

பாஜக தலைவர்கள் இதுபோன்று மிரட்டல் விடுவது புதிதில்லை என்றாலும் சமீப காலங்களில் இது அதிகரித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது

வீடியோ
{youtube}nIYz1Y26m1o{/youtube}

BJP MLA Brij Bhushan Rajput has made a controversial statement said Muslims will be “denied” Haj pilgrimage if they oppose Ram Mandir construction in Ayodhya.