மாட்டுக்கறி வைத்திருந்த பாஜக பிரமுகர்: அடித்து உதைத்த பசு பயங்கரவாதிகள்! Featured

Sunday, 16 July 2017 12:40 Published in இந்தியா

நாக்பூர்(16 ஜூலை 2017): நாக்பூரில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக பாஜக பிரமுகர் சலீம் இஸ்மாயில் ஷா என்பவர் பசு பாதுகாப்பு பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட நிலையில் அவர் வைத்திருந்தது மாட்டுக்கறிதான் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

கடந்த புதனன்று நாக்பூர் பர்சிங்கி பகுதியில் சலீம் இஸ்மாயில் ஷா என்ற 36 வயது பாஜக பிரமுகர் மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி நான்கு பேர் கொண்ட பசு பயங்கரவாத கும்பல் கையில் ஆயுதங்களுடன் வந்து பொதுமக்கள் முன்னிலையில் தாக்குதல் நடத்தியது.

சலீம் கையில் வைத்திருந்தது மாட்டுக்கறி அல்ல என்றும் ஆட்டுக்கறி என்றும் கூறியுள்ளார். அதை கைபற்றிய கும்பல் அதனை சோதனைக்காக அனுப்பியது. தற்போது அது மாட்டுக்கறிதான் என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே மஹாராஷ்டிராவில் மாட்டுக்கறிக்கு தடையுள்ளபோதும் சலீம் மீது தாக்குதல் நடத்தியதற்கு சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தாக்குதல் நடத்தியவர்கள் பாஜக எம்.எல்.ஏவின் ஆட்கள் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நான்குபேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் நாக்பூர் பாஜக தலைவர் ராஜீவ் போத்தார் இதுகுறித்து தெரிவிக்கையில், பாஜக பிரமுகர் மாட்டுக்கறி வைத்திருந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவர் கட்சியை விட்டு நீக்கப்படுவார்" என்று தெரிவித்துள்ளார்.

மாட்டுக்கறியின் பேரில் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தும் மாட்டுக்கறியின் பெயரில் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறமை குறிப்பிடத்தகக்து.

Salim Ismail Shah, 36, was attacked by a few men on suspicion of carrying beef in Nagpur's Bharsingi area. The attackers were reportedly linked to a fringe group related to local MLA Bachchu Kadu.

 

Last modified on Sunday, 16 July 2017 12:46
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.