விபத்தில் சிக்கிய அமர்நாத் யாத்ரீகர்களுக்கு உதவிய உள்ளூர் முஸ்லிம்கள்! Featured

Monday, 17 July 2017 13:15 Published in இந்தியா

ஜம்மு(17 ஜூலை 2017): ஜம்மு காஷ்மீர் அமர்நாத் யாத்திரையில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கிய யாத்ரீகர்களுக்கு உள்ளூர் முஸ்லிம் தன்னார்வ அமைப்பு பல உதவிகள் புரிந்துள்ளன.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள்.

பள்ளத்தாக்கான மலைப்பாதை வழியாக பாஹல்காம் பகுதியில் உள்ள மலையடிவார முகாமில் இருந்து 46 கிலோமீட்டர் தூரத்தை கடந்தும் பாஹல்காம் பகுதியில் உள்ள மலையடிவார முகாமில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தை கடந்தும் அமர்நாத் ஆலயத்தை சென்றடைய வேண்டும்.

62-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த ஆண்டின் யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி ரக்‌ஷா பந்தன் தினத்தன்று நிறைவடையும். பல்டல் மற்றும் பாஹல்காம் முகாம்களில் இருந்து மலைப்பாதை வழியாக தினந்தோறும் குழுக்களாக செல்லும் யாத்ரீகர்கள் அமர்நாத் ஆலயத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில், யாத்ரீகர்களில் சிலர் ஒரு வாகனத்தில் நேற்று ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். ரம்பான் மாவட்ட எல்லைக்குட்பட்ட சாலையில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் உள்ள பெரிய பள்ளத்துக்குள் உருண்டு கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 16 யாத்ரீகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 26 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் தன்னார்வ அமைப்பான 'WE FOR U’ என்ற அமைப்பு பல்வேறு உதவிகளை புரிந்துள்ளது.

2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பல உதவிகள் புரிந்து வருகின்றன. இதன் வாட்ஸ் அப் குழுமம் மூலம் விபத்து குறித்து தகவல் பெற்று சம்பவ இடத்திற்கு முதலில் சென்றவர் அமிர் வானி என்ற இந்த அமைப்பை சேர்ந்த முஸ்லிம். பின்பு அவ்வமைப்பின் பலரும் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தி பாதிக்கப்பட்டவர்களை மீட்க காவல்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பெரிய அளவில் உதவி புரிந்துள்ளனர்.

இதற்கிடையே 'WE FOR U’ அமைப்பு இல்யாஸ் பனிஹாலி என்பவர் தலைமையில் குழு அமைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டது.

'WE FOR U’ அமைப்பின் உதவியால் பெரும் உயிர் சேதம் தவிற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Sixteen Amarnath pilgrims were killed and 26 seriously injured when the bus in which they were travelling plunged into a gorge in Jammu and Kashmir’s Ramban District on Sunday, authorities said.
Soon after the accident, about a dozen lives of Amaranth pilgrims were saved by the locals of the Banihal area.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.