காணாமல் போன மகளின் இதயம்: ஐந்து வருடமாக தேடும் பெற்றோர்! Featured

Monday, 17 July 2017 16:42 Published in இந்தியா

மும்பை(17 ஜூலை 2017): மகளின் மர்ம மரணமும் காணாமல் போன அவரின் இதயத்திற்கும் விடை தெரியாமல் ஐந்து வருடமாக போராடி வருகின்றனர் ஒரு பெற்றோர்.

மும்பை லோகேஸ்வரியை சேர்ந்தவர் லஸிக் ஜியா ஹாசன். இவர் மனைவி நாகினா ஹாசன். இவர்கள் மகள் சனம் ஹாசன். வயது 19. புனேவில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி படித்துவந்தார். கடந்த 2012-ம் ஆண்டு தனது தோழிகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சனம், அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்ததற்கு காரணமாக, மருத்துவ அறிக்கைச் சொன்னதை கேட்டு சனமின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் சனம் உடலில் ஆல்கஹால் கலந்திருந்ததாகவும் அதன் காரணமாக இதயத்துக்குச் செல்லும் ரத்தம் நின்று போனதாகவும் அவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதை நம்ப சனமின் பெற்றோர் தயாராக இல்லை. ஏனென்றால், சனம் புட்பால் வீராங்கனை. இறப்பதற்கு காலையில் கூட நன்றாக உடற்பயிற்சி செய்திருக்கிறார். அதோடு மதுப்பழக்கம் அவருக்கு சுத்தமாக கிடையாது.

இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் இதை தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடபட்டது. சிபிஐ சனத்தின் இதயத்தை பரிசோதனை செய்தது. அங்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அது ஆணின் இதயம் என்றும் இது பெண்ணுக்கானது இல்லை என்றும் கூறப்பட்டது.

பிறகு என் மகளின் இதயம் எங்கே? என்று அவரது பெற்றோர் கேட்டனர். பின், டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டது. அந்த இதயத்துக்கும் சனத்தின் பெற்றோரிடம் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவுக்கும் தொடர்பே இல்லை. இதையடுத்து விவகாரம் மேலும் பரபரப்பானது. பின்னர் ஐதராபாத்தில் உள்ள லேபுக்கு இதயம் அனுப்பப்பட்டது. அங்கு இன்னொரு அதிர்ச்சி. பரிசோதித்த டாக்டர்கள், இது பெண்ணுக்கான இதயம்தான். ஆனால், வயதான பெண்ணின் இதயம் என்றனர்.

‘செல்வாக்குள்ள ஒருவர் எங்கள் மகளின் இறப்பில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருக்கிறார் என சந்தேகப்படுகிறோம். மருத்துவ அறிக்கைகள் எங்கள் மகள் இதயம் இல்லை என்பது உறுதி செய்திருக்கின்றன. பதப்படுத்தப்பட்ட வேறு யாரோ ஒருவரின் இதயத்தைக் கொண்டு வைத்து ஏமாற்றியுள்ளனர். இதற்கு வலுவான காரணம் இருக்கிறது. ஆனால் அதற்கு விடைதான் தெரியவில்லை என்று திண்டாடுகின்றனர் சனமின் பெற்றோர்.

சிபிஐ இதனை விசாரித்து வரும் நிலையில் இதுவரை அதற்கான விடை கிடைக்கவில்லை என்பது வேதனை.

Nearly five years after the death of Sanam Hasan post her 19th birthday party, her parents are searching for answers and her heart, which has mysteriously gone missing during the course of the investigation. This goof-up only came to light a couple of weeks ago, after the forensic laboratory in Hyderabad confirmed that they had been given an older woman's instead.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.