துணை ஜனாதிபதி பாஜக வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிப்பு! Featured

Monday, 17 July 2017 19:53 Published in இந்தியா

புதுடெல்லி(17 ஜூலை 2017): துணை ஜனாதிபதி பதவிக்கு பாஜக சார்பில் வெங்கையா நாயுடு போட்டியிடுவார் என பாஜக தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இதில் ஆளும் பா.ஜனதா சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியிடப்படும்.

இதை தொடர்ந்து அடுத்த மாதம் 5–ந் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர் கட்சிகள் சார்பில் கோபால் கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார். ஆனால் பா.ஜனதா தங்கள் வேட்பாளரை இதுவரை அறிவிக்காமல் இருந்ததது.

இந்நிலையில் இன்று மாலை பாரதீய ஜனதா கட்சியின் உயர் மட்டகுழு கூட்டம் நடைபெற்றதை அடுத்து பாஜக துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.

Union Minister M Venkaiah Naidu is the BJP's choice for Vice President. The decision was taken at a meeting headed by Prime Minister Narendra Modi this evening.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.