அமர்நாத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! Featured

Tuesday, 18 July 2017 02:24 Published in இந்தியா

ஜம்மு(18 ஜூலை 2017): அமர்நாத் யாத்ரீகர்கள் தாக்குதலில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஜம்முமற்றும்காஷ்மீரின்அனந்த்நாக்பகுதியில்பேருந்துஒன்றில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்தின் மீது அப்பகுதியில் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 8 பக்தர்கள் பலியாகினர். 12 பேர் வரை காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அமர்நாத் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் தீவிரவாத அமைப்பினை சேர்ந்த 3 தீவிரவாதிகளை அனந்த்நாக் பகுதியில் வைத்து பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.

 

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.