அந்தமானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

போர்ட்பிளேயர்(11 ஆகஸ்ட் 2017): அந்தமான் தீவுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து தகவல் எதுவும் இல்லை