ரிபப்ளிக் டி.விக்கு கேரள மக்கள் வைத்த ஆப்பு!

புதுடெல்லி(11 ஆகஸ்ட் 2017):  கேரள மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து அர்ணாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டி.வியின் டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்து மிகவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் பாஜகவுக்கு எதிராக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுவதாகவும், சட்டஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் அர்ணாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டி.வி. செய்தி வெளியிட்டது.

உண்மை தெரியாமல் சங்பரிவார அமைப்புகளுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்து செய்தி வெளியிட்ட ரிபப்ளிக் டிவிக்கு எதிராக கேரள மக்கள் கொந்தளிக்க தொடங்கினர். இதனால் ரிபப்ளிக் (Republic) தொலைக்காட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தையும், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் மொபைல் அப்பையும் மிகக் குறைவாக மதிப்பீடுகளை வழங்க ஆரம்பித்தனர். இதனால் ரிபப்ளிக் தொலக்காட்சியின் டி.ஆர்.பி. (TRP) ரேட்டிங் மிகவும் குறைய ஆரம்பித்தது. இதனால் அந்த தொலைக்காட்சியின் வருமானம் மிகவும் குறைய ஆரம்பித்தது.

இதனால் ரிபப்ளிக் தொலைக்காட்சி அப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து எடுப்பது என ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அந்த அப் நீக்கப்பட்டது.

Thousands of Malayalis took to Facebook to derate the official Facebook page of Republic TV over Goswami’s desperate attempts to portray Kerala in a negative light in view of the ongoing political violence between CPI-M activists and RSS followers.

 

Last modified on Friday, 11 August 2017 14:16