முஸ்லிம்கள் பெயரில் உலாவரும் போலி ஃபேஸ்புக் பக்கங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட்! Featured

Friday, 11 August 2017 15:02 Published in இந்தியா

புதுடெல்லி(11 ஆகஸ்ட் 2017): கலவரத்தை தூண்டும் விதத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவளிப்பதுபோன்று போலி ஃபேஸ்புக் பக்கங்கள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் பாஜக ஆட்சியமைந்தது முதல் முஸ்லிம்களும், தலித்துகளும் குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது சமூக வலைதலங்கள் மூலம் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி கலவரத்தை தூண்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

அதன் ஒரு பகுதியாக சங் பரிவார கும்பல் முஸ்லிம்களின் பெயரிலும், சில முஸ்லிம் குழுமங்களை ஏற்படுத்தி அதன் மூலம் முஸ்லிம்களை உணர்ச்சி வசப்படுத்தி கலவரங்களை தூண்ட முயல்வதாக தெரிகிறது. எங்கோ எப்போதோ நடந்த சம்பவங்களை தகுந்த ஆதாரமின்றி இதுபோன்ற ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்வதோடு, அதன் மூலம் சில சங்பரிவார குழுக்கள் வன்முறையை தூண்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் முகநூல் பதிவுகளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் தெளிவு படுத்துகின்றன.

எனவே இதுபோன்ற ஆதாரமற்ற முகநூல் பக்கங்களை லைக் செய்யாமல் இருப்பதோடு, இதுபோன்ற செய்திகளையோ வீடியோக்களையோ பகிரவோ பதியவோ வேண்டாம் என்பது முஸ்லிம் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

Last modified on Friday, 11 August 2017 15:07
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.