வந்தே மாதரம் பாடலை பாட மறுத்த பாஜக அமைச்சர்! Featured

Saturday, 12 August 2017 10:30 Published in இந்தியா

லக்னோ(12 ஆகஸ்ட் 2017): உத்திர பிரதேச அமைச்சர் ஒருவர் டி.வி. பேட்டி ஒன்றில் வந்தே மாதரம் பாடலை பாடாமல் மழுப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி உத்திர பிரதேச அரசு மாநில பள்ளிகள் முழுவதும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் சுதந்திர தினத்தன்று தேசிய கீதத்துடன் வந்தே மாதரமும் பாட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம் கல்வி நிலையங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அதனை வீடியோ எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் சிறுபான்மை துறை நலன் அமைச்சராக இருப்பவர் பல்தேவ் சிங் ஆலுக். இவர் அண்மையில் 'இந்தியா டுடே' தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். வந்தே மாதரம் கட்டாயமாக்கப்படுவது குறித்த அந்த நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில், நீங்கள் வந்தே மாதரம் பாடுங்கள் என்று அமைச்சரிடம் கூறியுள்ளனர். ஆனால், அமைச்சரோ வந்தே மாதரத்திலிருந்து ஒரு வரி கூட பாடவில்லையாம். மாறாக, "வந்தே மாதரத்தை நாட்டில் உள்ள அனைவருமே பாட வேண்டும்" என்று பேச்சை மாற்றி எஸ்கேப் ஆகியுள்ளார்.

பாஜக அமைச்சர் ஒருவரே வந்தே மாதரம் பாடலை பாடாமல் எஸ்கேப் ஆன விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.